

கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தலைமை வகித்தார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்தனர்.