கோவை: முதல்வர், எம். பி குறித்து அவதூறு பேச்சு - இருவர் கைது

67பார்த்தது
தமிழக முதல்வர் மற்றும் திமுக எம். பி கனிமொழி, துணை முதல்வர் ஆகியோரைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி, இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவர் மது அருந்திய நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டனர். அந்த வீடியோவில் முதல்வர், கனிமொழி எம். பி, மற்றும் துணை முதல்வர் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், திமுக ஐ. டி விங் பொறுப்பாளர் சக்திவேல் என்பவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிவா மற்றும் அவரது நண்பர் சந்திரசேகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி