கோவை: கடன் கொடுத்துவிட்டு மிரட்டும் நிதி நிறுவனம்!

52பார்த்தது
கோவை சவுரிபாளையம் பகுதியில், நிவாஸ் ஹவுஸிங் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம், கடன் தவணை செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு கும்பலாக சென்று மிரட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில், ஒரு பெண்மணி ஒரு மாத தவணை செலுத்தாததால், நான்கு ஊழியர்கள் அவரது வீட்டிற்குச் சென்று மிரட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது போன்ற செயல்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்ந்தால், தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. காவல்துறையினர் இது போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி