கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கோவிலுக்கு வரும் உபயதாரர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் வி. ஐ. பி பாஸ் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே மருதமலை திருக்கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் துணை ஆணையர் செந்தில்குமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான சிறப்பு அனுமதி சீட்டுகளை வழங்காமல் நீண்ட நேரம் காக்க வைத்ததால், கோவில் உபயதாரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
குறிப்பாக 750 சிறப்பு அனுமதி சீட்டுகள் அச்சிடப்பட்டும் அவற்றை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையரும் திருக்கோவில் செயல் அலுவலருமான செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜெயகுமார் ஆகியோர் கைப்பற்றி வைத்து உள்ளதாகவும் அதிகாரிகளுக்கோ கோவில் அர்ச்சகர்களுக்கு கூட அவற்றை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கோவில் உபயதாரர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை நேற்று இரவு முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.