கோவை: ரமலான் விழா- அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!

68பார்த்தது
கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தி. மு. க சார்பில் உலமாக்கள் பங்கேற்ற ரமலான் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசியவர்,
சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக இருக்கக்கூடிய ஒன்றிய அரசு, சிறுபான்மை மக்கள் மீது எப்பொழுதெல்லாம் தாக்குதல் தொடுக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் நெஞ்சுரத்தோடு அந்த தாக்குதலை எதிர்த்து சிறுபான்மை மக்களுக்கு அரணாக திராவிட மாடல் அரசை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
வரக்கூடிய காலத்தை நாம் உணர்ந்து, வரக்கூடிய பேராபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். எங்காவது அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்களுடைய மனநிலை மாற்றி இருக்கக் கூடியவர்களுக்கு, தாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு அவர்கள் இடத்திலே எடுத்துச் சொல்லி வரக் கூடிய இந்த கால கட்டத்தில் இருக்கக் கூடிய அந்த ஆபத்தை நாம் தடுக்காவிட்டால் வரும் காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒரு கணம் யோசித்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் ஒரு மோசமான சூழலை உருவாக்க முயற்சி செய்கின்றார்கள்.
அந்த முயற்சியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தடுத்து நிறுத்தி, இது திராவிட மாடல் அரசினுடைய மண், இது பெரியார் மண் என்ற வகையிலே ஒரு நல்ல அரசை மக்களுக்காக உழைத்து கொண்டு இருக்கிறார். நிச்சயமாக உங்களோடு தோள் கொடுத்து நாங்கள் நிற்போம். உதவிகளை செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி