ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று (பிப்.23) துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், விளம்பர படம் ஒன்றில் நடித்து வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் M.S.தோனி மஞ்சள் நிற ஜெர்சியில் இந்த போட்டியை திரையில் கண்டுகளித்தார். உடன் நடிகர் சன்னி தியோல் இருந்தார்.