பெரு: வணிக வளாக மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்தனர். லா லிபரேட்டட் மாகாணத்தில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தின் மேற்கூரை நேற்றிரவு பிப்.22 திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இக்கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.