சென்னை: மகா சிவராத்திரிக்கு வடிவம் கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி

54பார்த்தது
சென்னை: மகா சிவராத்திரிக்கு வடிவம் கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி
இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19 ஆம் தேதி வரையிலான 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு, காலை உணவு வழங்கும் சிறப்புமிகு "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" மாபெரும் திட்டத்தின் 4ஆம் நாளான இன்று துறைமுகம் கிழக்கு பகுதி, மண்டலம்-5, வார்டு-60, மண்ணடி, செம்புதாஸ் தெரு சந்திப்பு, மூக்கர் நல்லமுத்து தெரு மற்றும் அன்னை சத்யா நகர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மகா சிவராத்திரி விழாவன்று திருக்கோயில்களுக்கு வருகைபுரியும் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்து தரப்பட்டு வருகிறது. பல கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தினாலும் திராவிட மாடல் ஆட்சியின் பணி தொடரும். இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி