பற்றி எரிந்த கார்.. நூலிழையில் உயிர் தப்பிய 5 பேர் (வீடியோ)

60பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாலையில் காய வைக்கப்பட்ட புற்களால், கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், நூலிழையில் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர். காய்ந்த புல் காரின் அடியில் சிக்கி சாலையில் உரசிக்கொண்டே வரும் போது தீப்பிடித்து, காரில் தீ பரவியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 5 பேரும் காரை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். தீ பரவி கார் முழுவதும் சேதமானதை அடுத்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி