இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவையே முதலில் தலைநகராக வைத்திருந்தனர். ஆனால் மேற்கு வங்கத்தில் இருந்து வங்க தேசத்தை பிரித்த பின் நடந்த கிளர்ச்சி காரணங்களால் அங்கிருந்து டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டது. டெல்லியில் ஏற்கனவே டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் வலுவான கட்டமைப்பை வைத்திருந்தனர். இதனால் சுதந்திரத்திற்குப் பின்னர் டெல்லியே இந்தியாவின் நிரந்தர தலைநகராகிப் போனது.