சென்னை: சீரியல் நடிகர் செந்திலிடம் ரூ.15 ஆயிரம் ஆன்லைன் மோசடி

61பார்த்தது
சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் செந்திலிடம் யாரோ ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் ரூ 15 ஆயிரத்தை ஏமாற்றிவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சின்னத்திரை நடிகர் செந்தில் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, கோவையில் எனக்கு தெரிந்த ஒரு பெரிய ஹோட்டல் அதிபர் இருக்கிறார். அவருடைய வாட்ஸ் ஆப்பில் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என வந்தது. நானும் என்ன உதவி வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் பணம் வேண்டும் என்றார். 

எவ்வளவு வேண்டும் என்றேன், ஒரு 15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றார். உங்களுக்கு பணம் ரொக்கமாக வேண்டுமா என கேட்டேன். அதற்கு அவர் இல்லை எனக்கு ஜிபே செய்துவிடுங்கள் என கூறி ஒரு எண்ணை அனுப்பினார். நான் என்னிடம் ஜிபே இல்லை என்றேன். மேலும் யாரையாவது அனுப்புங்கள் நான் பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்றேன். அதற்கு அவர் எனக்கு அக்கவுண்ட்டில்தான் வேண்டும். வங்கிக் கணக்கில் டிரான்ஸ்பர் செய்ய முடியுமா என கேட்டார். நானும் சரி என்றேன். நானும் எப்படியோ ஜிபேவில் பணம் அனுப்பிவிட்டேன். பணத்தை அனுப்பிய பிறகுதான் அதில் யோகேந்திரன் என வந்தது. மேலும் கோவை தொழிலதிபர் தனது நம்பருக்கு அனுப்புமாறு சொல்லாமல் வேறு எண்ணை தருகிறார் என்றால் அது மோசடியா இருக்குமோ என நினைப்பதற்குள் பணம் எல்லாம் போச்சு என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி