மைலாப்பூர் - Mylapore

சென்னை: அம்பேத்கர் சட்டப் பல்கலையில் உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம்

சென்னை: அம்பேத்கர் சட்டப் பல்கலையில் உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு முகாம் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. அதன்படி கல்விச் சுற்றுலா எனும் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களை அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி படிப்பு தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை விருகம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் பலர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு இன்று கல்விச் சுற்றுலா வந்தனர். பல்கலைக்கழகத்தின் வளாகத்தை சுற்றி பார்த்த மாணவர்களுக்கு, அங்கு கற்று தரப்படும் சட்டம் சார்ந்த படிப்புகள் குறித்து பேராசிரியர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ்குமார், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், வாழ்வியல் ஒழுக்கம் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அதன்பின்னர் மாணவர்களுக்கு சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீடியோஸ்


சென்னை
சென்னை: நடப்பாண்டில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நாய்க்கடி பாதிப்பு
Nov 10, 2024, 06:11 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

சென்னை: நடப்பாண்டில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நாய்க்கடி பாதிப்பு

Nov 10, 2024, 06:11 IST
தமிழகத்தில் நடப்பாண்டில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை தெரு நாய்களின் பெருக்கம் அதிகமாகவுள்ளது. சென்னையில், 1. 70 லட்சம் உட்பட மாநிலம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் கடியால் தினமும் பலர் பாதிக்கப் பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 36 பேர் வெறி நோய் என்ற ‘ரேபிஸ்’நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு 18 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்தாண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், பாம்பு கடியால் 16, 000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, தமிழகத்திலுள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் விலங்குகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு வழங்கக் கூடிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.