தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
1. கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம்
2. மாநாட்டை வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
3. மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம்
4. ஜனநாயக கொள்கை தீர்மானம்
5. பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
6. சமூக நீதிக் கொள்கை தீர்மானம்
7. மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம்
8. விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
9. கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம்
10. ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம்
11. மொழிக் கொள்கை தீர்மானம்
12. மக்கள் மீது நிதிச் சுமைத் திணிப்பு சார்ந்த தீர்மானம்
13. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்
14. மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கத் தீர்மானம்
15. மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் கொள்கை தீர்மானம்
16. உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.