சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - Chepauk thiruvallikeni

சென்னை: தினக்கூலி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: தினக்கூலி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

பொதுப்பணித் துறையின் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறையில் தினக்கூலி பணியாளர்களாக (என். எம். ஆர்)10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றிய பணியாளர்களுக்கு, 10 ஆண்டு பணி முடித்திருந்தால் பணி ஆணை வழங்க வேண்டும் என்று அரசின் விதிமுறை உள்ளது. இதைப் பின்பற்றி பணியாளர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் கணக்கிட்டு கல்வித் தகுதிக்கேற்ப பணிப்பயன் மற்றும் பணப்பயன், பணி ஆணை வழங்குதல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்நுட்ப களப் பணியாளர் சங்கம் (பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை) சார்பில் சென்னை சேப்பாக்கம் பொதுப் பணித்துறை வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர் சங்கத் தலைவர் சி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் எல். கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்கள் எம். லட்சுமணன், எஸ். நாராயணன், எ. எழிலரசன், எம். முருகவேல், பி. முனிரத்தினம் துணைச் செயலாளர்கள் பி. வீரசெல்வம், எம். ரமேஷ்குமார், வி. நாகராஜ், கே. கோபிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மண்டல பொறுப்பாளர் எம். அலமேலு வரவேற்றார். இப்போராட்டத்தில் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: இடஒதுக்கீடு குறித்து எல்.முருகன் ஆவேச கருத்து
Oct 22, 2024, 16:10 IST/அண்ணா நகர்
அண்ணா நகர்

சென்னை: இடஒதுக்கீடு குறித்து எல்.முருகன் ஆவேச கருத்து

Oct 22, 2024, 16:10 IST
இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? இடஒதுக்கீடு பற்றி பேச துளியும் தகுதியற்ற தலைவர் திருமாவளவன். பட்டியலின மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்றுதான் பாஜக பணியாற்றி வருகிறது. ஆன்மிகத்தையும், சனாதனத்தையும் நாங்கள் ஆதரிப்போம். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை சட்டரீதியாக பெற்றுத் தருவதில் என்னுடைய பங்கு என்ன என்பது சமுதாயத்துக்கு தெரியும். அந்தந்த மாநிலங்கள், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடை வழங்கிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் மறுஆய்வு மனுவை கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரா?. தமிழக ஆளுநர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது யூகங்கள்தான். தமிழக ஆளுநர் சிறப்பாக செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.