சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - Chepauk thiruvallikeni

பேரிடர் காலங்களில் மத்திய, மாநில பேரிடர் முகாம்: இன்று ஆலோசனை

பேரிடர் காலங்களில் மத்திய, மாநில பேரிடர் முகாம்: இன்று ஆலோசனை

பேரிடர் காலங்களில் மத்திய, மாநில பேரிடர் முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதுகுறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் உறுப்பினர் லெப்டினென்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் சென்னையில் நேற்று(செப்.17) செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாறி வரும் பருவநிலை மாற்றம்காரணமாக, புயல், நிலச்சரிவு, மேக வெடிப்பு, அதன்மூலம் அதிகனமழை பெய்வது உள்ளிட்ட பேரிடர்கள் நிகழ்கின்றன. குறிப்பாக, வங்காள விரிகுடா கடல் பகுதியில் அதிகளவு புயல்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்காக மத்திய, மாநில அரசுகளின் பேரிடர்முகமைகள் உள்ளன. ஆனால், இந்த முகமைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி சென்னையில் உள்ள தக் ஷிண பாரத ராணுவ மையத்தில் செப். 18, 19-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நடைபெறுகிறது. இதில் மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை முகமைகள், ராணுவம், விமானப் படை, கடற்படை, கடலோர காவல் படை, மத்தியரிசர்வ் காவல் படை, வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம் உள்ளிட்ட 35 முகமைகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

வீடியோஸ்


சென்னை