காவலர் வீரவணக்க நாள்: டிஜிபி மரியாதை

72பார்த்தது
பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

இன்று கடந்த ஓராண்டில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவல் துறை தலைமை இயக்குநரும் படைத் தலைவருமான சங்கர் ஜிவால், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி மறைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.

அதனைதொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பிரார், காவல் துறை தலைமை இயக்குநர்கள், சென்னை காவல் ஆணையர் அருண், ஓய்வுபெற்ற காவல் துறை இயக்குநர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி