சென்னை: 14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: முதல்வர்
தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு அமைச்சர் கே. என். நேருவையும், தேனி மாவட்டத்துக்கு அமைச்சர் இ. பெரியசாமியையும், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு அமைச்சர் எ. வ. வேலுவையும், நியமித்து உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்துக்கு அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்தையும், தென்காசி மாவட்டத்துக்கு அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனையும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் நியமித்துள்ளார். நீலகிரி மாவட்டத்துக்கு அமைச்சர் மு. பெ. சாமிநாதனும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அமைச்சர் அர. சக்கரபாணியும், கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு அமைச்சர் வி. செந்தில் பாலாஜியும் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அமைச்சர் ஆர். காந்தியையும, பெரம்பலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரையும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனையும் நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.