சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - Chepauk thiruvallikeni

சென்னை: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறேன் என்று எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு விடுதலை பெற்ற பின், 1956-ம் ஆண்டு நவ. 1-ம் தேதி நாடுமுழுவதும் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரிந்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும்பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் நாளை எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக தமிழக அரசு அனுசரிக்கிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில். “தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்! ” எனப் பதிவிட்டுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
Nov 01, 2024, 13:11 IST/தியாகராய நகர்
தியாகராய நகர்

விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம்: செல்வப்பெருந்தகை

Nov 01, 2024, 13:11 IST
தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டது. அதிகாரப்பகிர்வு குறித்த தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம். தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் பெருந்தலைவர் ‌காமராஜர் கட்சி அமைய வேண்டும். அதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும் என அவர் கூறினார்.