அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி விவரிப்பு

60பார்த்தது
கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். கொள்கை இல்லாத கட்சிகள்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவை விஜய் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை, கூட்டணி ஆட்சியில் பகிர்வு என்று பேசியிருக்கிறார். வருங்காலத்தில் அதிமுக விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கிறார். அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. விஜய் இப்போதுதான் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். முதல் மாநில மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். அதிமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை என்றார்.

பாஜக, திமுகவை விஜய் விமர்சித்து பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு, விஜய் ஒரு கட்சியின் தலைவராகிவிட்டார். அந்தக் கட்சிக்கு என்ன கருத்து இருக்கிறதோ, அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது என்று அவர் கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி