அண்ணா நகர் - Anna nagar

சென்னை: தடையை மீறி போராட்டம்: கிருஷ்ணசாமி மீது வழக்கு பதிவு

சென்னை: தடையை மீறி போராட்டம்: கிருஷ்ணசாமி மீது வழக்கு பதிவு

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது எழும்பூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறி, அந்த இட ஒதுக்கீட்டை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே ஆளுநர் மாளிகை நோக்கி விழிப்புணர்வு பேரணி நவ. 7-ம் தேதி (நேற்று முன்தினம்) நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் காலை டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார், பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர். இதையடுத்து டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. திடீரென கொட்டும் மழையில் டாக்டர் கிருஷ்ணசாமி சாலையின் நடுவே படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், தடையை மீறி பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

வீடியோஸ்


சென்னை