அண்ணா நகர் - Anna nagar

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை.. கைதானோர் சொத்துகளை முடக்க நடவடிக்கை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை.. கைதானோர் சொத்துகளை முடக்க நடவடிக்கை

புதிய குற்றவியல் சட்டத்தின்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் சென்னை போலீசார் இறங்கியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இவ்விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் பொன்னை பாலு உட்பட 10 பேர் முதல் கட்டமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இதற்கிடையே புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள 'பி.என்.எஸ். 107' சட்டப்பிரிவின் கீழ் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு மட்டுமே இருந்துவந்த இந்த அதிகாரம் புதிய சட்டப்பிரிவின் கீழ் போலீசாருக்கும் வழங்கப்பட்டுள்ளதால், இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் செம்பியம் போலீசார் இறங்கியுள்ளனர்.

வீடியோஸ்


சென்னை