சென்னையில் ஆவின் பால் விற்பனை சரிவு

56பார்த்தது
சென்னையில் ஆவின் பால் விற்பனை சரிவு
தமிழகத்தில் தினசரி மின் தேவை16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில்உள்ளது. இது குளிர்காலத்தில் 10 ஆயிரம் மெகாவாட் ஆகவும், கோடை காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் ஆகவும் இருக்கும். கோடை காலத்தில், இந்த ஆண்டுமே 2-ம் தேதி மின்தேவை 20, 830மெகாவாட் ஆக அதிகரித்தது. இதுவே உச்சபட்ச அளவாகும்.

தமிழகத்தில் அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கினாலும், செப்டம்பர் மாதத்திலேயே பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், அந்த மாதம் மின்நுகர்வு வழக்கத்தைவிட குறையும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரில் எப்போதும் இல்லாத அளவுக்குகோடை காலத்தைப் போல வெயில்சுட்டெரித்தது. அதன் காரணமாக, தினசரி மின்தேவை 17, 500 மெகாவாட் வரை அதிகரித்தது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமுறை விடப்பட்டதால் தொழிற்சாலைகள், கல்விநிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படவில்லை. இதனால், தினசரி மின்தேவை குறைந்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளன்று தமிழகத்தில் தினசரிமின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. இது நேற்று 5 ஆயிரம் மெகாவாட் குறைந்து 11 ஆயிரம் மெகாவாட் ஆனது.

இதேபோல், சென்னையில் தினசரி ஆவின் பால் 14. 50 லட்சம் லிட்டர் விற்பனையாகும். இந்நிலையில், தீபாவளி காரணமாக கடந்த 2 நாட்களில் 2 லட்சம் லிட்டர் பால்விற்பனை குறைந்துள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி