லால்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
தஞ்சாவூர் மாவட்டம் அய்யாசாமிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் ராமு. இவர் சம்பவம் நடந்த மூன்றாம் தேதி அன்று லால்குடி அருகே உள்ள முத்துவத்தூர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அப்பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த முதியவர் ராமு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராமு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளக்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.