தொட்டியம் அருகே உள்ள அம்மன்குடி கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் மகள் ரம்யா இவர் கரூர் அய்யர்மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த ரம்யா இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் புதன்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவருடைய தாய் சுசிலா அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற தொட்டியம் போலீசார் ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.