
தொட்டியம்: பைக்கில் சென்றவர் மயங்கி கீழே விழுந்து பலி
தொட்டியம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் ராம்போலா மஸ்கமேஷ் வட நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் வந்து குடியேறி தொழில் நடத்தி வருகிறார். பாப்பாபட்டி கொளக்குடி சாலையில் சேறுகுடி பிரிவு ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி அளித்த தகவலின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.