திருவெறும்பூர்: உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்கொலை

75பார்த்தது
திருவெறும்பூர்: உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்கொலை
திருச்சி திருவெறும்பூர் சிகேபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெரியநாயகி. இவர் இதய பிரச்சினை மற்றும் பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(அக்.26) திருவெறும்பூர் விஓசி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். உறவினர்கள் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பெரிய நாயகி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி