துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திர சா அறிவிப்பு ஒன்றை இன்று(செப்.10) வெளியிட்டுள்ளார்.
துறையூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் புதிய குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டு வீட்டிணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பழுதடைந்த சாலைகள் சீரமைத்து புதிய சாலைகளை போடப்பட உள்ளதால், வீட்டிணைப்பு இல்லாத வரி விதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள், இப் புதிய திட்டத்தின் குடிநீர் வீட்டிணைப்பு உடனடியாக நகராட்சிக்கு விண்ணப்பித்து உரிய கட்டணங்களை செலுத்தி இணைப்புகளை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக சாலை அமைக்கப்பட்ட பின்பு இரண்டு வருட காலத்திற்கு அப்பகுதியில் குடிநீர் வீட்டு இணைப்பு வழங்கிட இயலாது என்பதனையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் சொத்து வரி குடிநீர் கட்டணம் மற்றும் குடிநீர் வைப்புத்தொகை நிலுவையின்றி நகராட்சி அலுவலக கருவூலத்தில் செலுத்தி ரசீதனை பெற்று குழாய் பதிக்க வரும் பணியாளர்கள் பார்வைக்கு இணைப்பு வழங்கும்போது காண்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.