திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகுட்பட்ட 19 மற்றும் 20 வது வார்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிநீருடன் கலங்களாக வருவதாக புகார் வந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அந்த பகுதியில் ஆய்வு செய்து அதனை சரி செய்ய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் மீண்டும் மாநகராட்சி மேயர் இன்று ஆய்வு மேற்கொண்டார். வீடு வீடாக சென்று மக்களிடம் குடிநீர் குறித்து கேட்டறிந்த அவர் அவர்கள் வீட்டிலிருந்து குடிநீரை வாங்கி குடித்து பார்த்தார்.