தொட்டியம் அருகே மணமேடு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் -முசிறி தொகுதி எம்எல்ஏ. பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மணமேடு கிராமத்தில் மணமேடு , அலகரை, கொளக்குடி, அப்பனநல்லூர் , கோடியாம்பாளையம் , சீனிவாச நல்லூர் ஆகிய கிராமங்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்து அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.
ஒன்றிய குழு தலைவர்கிருஷ்ணவேணி, துணைத்தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையர்கள் செந்தில்குமார் , ஞானமணி ஆகியோர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமின் நோக்கம் குறித்தும், பயனாளிகள் பயன்பெறும் விதம் பற்றியும் விரிவாக பேசினர். முகாமில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, காவல் துறை, மின்வாரிய துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர். சுமார் 600 க்கும் மேற்பட்ட மனுக்கள் முகாமில் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.