துறையூரில் உள்ள நவீன எரிவாயு தகனம் மேடையில் சடலங்கள் எரியூட்டும் பணி பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
துறையூர் நகராட்சி மூலம் ஆத்தூர் சாலையில் உள்ள சுடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த நவீன எரிவாயு தகனமேடையில் முறையாக பராமரிக்கப்படாததால் சடலங்கள் சரியாக எரியூட்டப்படுவதில்லை என்று பொதுமக்கள் குறை கூறி வந்த நிலையில் அங்கு அவசர அவசிய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இதனால் இறந்தவர்களின் உடல்களை நவீன எரிவாயு தகனம் மேடையில் தகனம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் பராமரிப்பு பணிகள் நிறைவேற்றவுடன் நவீன எரிவாயு தகனமேடை செயல்படும் என்றும் துறையூர் நகராட்சி அனைய சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.