எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். இரட்டை இலை சம்பந்தமாக இன்று பதில் மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் புகழேந்தி, "எந்த நீதிமன்றமும் இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க உத்தரவிடவில்லை என கருத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், இபிஎஸ்க்கு எந்த அதிகாரத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் வழங்கக்கூடாது" என பதில் மனு தாக்கல் செய்தார்.