திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே புதிய நான்கு வழி சாலை வேடப்பட்டி பிரிவில், இன்று (ஜனவரி 13) ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் ஒருவழிப்பாதையில் இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக வந்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை திருப்ப முற்பட்டபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நிலை தடுமாறி ஓய்வு பெற்ற அதிகாரி வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.