தென்கிழக்கு பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜன.11ம் தேதி, இபடிங்கா நகரில் ஒரு மணி நேரத்திற்குள் பெய்த கனமழையால், நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதுவரை நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.