மாட்டுக்கு சாவு பயத்தை காட்டிய சிறுத்தை.. ஷாக் வீடியோ
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பகுதியில், வீட்டின் அருகே மாடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மாட்டை வேட்டையாடுவதற்காக அங்கு சிறுத்தை வந்தது. பதுங்கு பதுங்கி வந்த சிறுத்தை, மாட்டின் அருகே சென்று தாக்க முயலும்போது, மாடு மிரண்டுபோய் தவ்வியது. உடனே அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பியது. இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து, ஊருக்குள் திரியும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நன்றி: NewsTamilTV24x7