பைக்கில் வந்தவரை மிதித்து கொன்ற காண்டாமிருகம் (வீடியோ)

83பார்த்தது
அசாம் மாநிலத்தின் மோரிகான் பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை காண்டாமிருகம் மிதித்துக் கொன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. போபிடோரா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வெளியே வந்த காண்டாமிருகம், அப்பகுதி வழியே வந்த சதாம் உசேன் (37) என்பவரை துரத்திச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சதாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி