சென்னை வியாசர்பாடி ஸ்ரீதீப்பாஞ்சம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நேற்றிரவு (செப்.29) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குழியில் இறங்கினர். அப்போது ஒரு பெண் தலை குப்பற தீக்குழியில் தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அந்த பெண்ணை உடனடியாக அங்கிருந்த மீட்புக் குழுவினர் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.