
குவாட்டர் பிரியாணி வாங்கிட்டு வா.. இளைஞரின் வீடியோ வைரல்
போதை இளைஞர் ஒருவர் போலீசாரிடம் வம்பு செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் ஒருவர், "எப்படின்னாலும் நைட்டு பூரா வெளுக்கப்போறிங்க, குவாட்டரும்-பிரியாணியும் வாங்கி தந்து அடிங்க. இல்லனா பாடில ஒண்ணுமில்லாம போயி சேர்ந்திடும். கொலை கேசுல நீங்க போயிடுவீங்க" என போதையில் திமிராக பேசியது காவலர்களின் பொறுமையை சோதித்தது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.