சீனாவில் 2 கருப்பைகளைக் கொண்ட பெண் ஒவ்வொரு கருப்பையில் இருந்தும் தலா ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ள செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. லீ என்ற பெண் ஒரே சமயத்தில் ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகளை ஈன்றுள்ளார். 2 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறும் மருத்துவர்கள் இந்த அரிய நிலையை Uterus Didelphys எனக் குறிப்பிடுகின்றனர். உலகிலேயே 0.3% பெண்களுக்கு மட்டுமே இதுபோல் நடக்கும் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.