
தவெக ஆண்டு விழா: டிரண்டாகும் #GetOut ஹேஷ்டேக்
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று (பிப். 26) நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய் மும்மொழி கொள்கை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் பதாகையில் கையெழுத்திட்டு, #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து டிரண்டாகி வருகிறது.