வழக்கை வாபஸ் பெற கூறி பெண்ணை தாக்கியவர் மீது புகார்

76பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் சாந்தி (45). கணவர் பெயர் ராஜ்குமார் இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த அன்பழகன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அன்பழகன் மீது சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும், அந்த புகாரை வாபஸ் பெற கோரி அன்பழகன் நார்த்தம்பட்டி பகுதியில் உள்ள சாந்தியின் வீட்டிற்கு வந்து சாந்தியை அடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில் அன்பழகன் மீது எம் ரெட்டியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி