விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் சக்திவேல் வயது 55. இவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் சென்று நரிக்குடி இருஞ்சிறை சாலையில் நேற்று(செப்.26) கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து காயம் அடைந்தவரின் மகன் சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் கட்டணூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.