பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கணவன் மனைவி மீது தாக்குதல்

56பார்த்தது
மாந்தோப்பு கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கணவன் மனைவியை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சேர்ந்தவர் அன்புச்செல்வி வயது 28. இவருக்கு முத்துப்பாண்டி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததாகவும், இதை அடுத்து அன்புச்செல்வி தரவேண்டிய பணத்தை கேட்டு முத்துப்பாண்டி அன்புச்செல்வியின் கணவரிடம் கேட்டதாகவும் அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி அன்புச்செல்வி கணவர் அக்னி பிரகாஷ்யை தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அன்புச்செல்வியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அன்பு செல்வி அளித்த புகாரியின் அடிப்படையில் மல்லாங்கிணறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி