உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்பு திமுகவினர் கொண்டாட்டம்

57பார்த்தது
*உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு திமுக இளைஞரணி சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்*


தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காரியாபட்டி திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் R. K. செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிதம்பரபாரதி, சேகர் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி