விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி அலுவலகம் எதிரே 6 கோடி மதிப்புள்ள 18 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்டிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சர்ச் கட்டிடத்தை அகற்றக்கோரி இந்து முன்னணி சார்பில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் காரியாபட்டி பேரூராட்சி திமுக வைஸ் சேர்மனாக இருக்கும் ரூபி அவர்களின் கணவர் சந்தோஷம் என்பவர் இந்து முன்னணி நிர்வாகிகளை விரட்டியதை கண்டித்தும் இந்த சர்ச் கட்டடத்தை அகற்றக் கோரி இந்து முன்னணி சார்பில் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரியாபட்டி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாவட்ட இந்து முன்னணி கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டார்.
இந்து முன்னணியினர் கலந்து கொண்டு இந்துக்களுக்கு ஒரு நியாயம், கிறிஸ்தவர்களுக்கு ஒரு நியாயமா என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்