திருட்டுத்தனமாக பட்டாசுகள் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை

52பார்த்தது
டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிற வகையான குடோன்களில், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக, கள்ளத்தனமாக பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன். , இ. ஆ. ப. , அவர்கள் எச்சரிக்கை.
-----

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிற வகையான குடோன்களில், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக, கள்ளத்தனமாக பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாகவும், பட்டாசு மற்றும் வெடிபொருள்களை உரிய உரிமமோ அல்லது அனுமதியோ இல்லாமல் பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்காக இருப்பு வைத்து, கொண்டு செல்வது வெடிபொருள் சட்ட விதிகள் 2008-ன் படி குற்றம் எனவும்.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டிரான்ஸ்ட்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிற வகையான குடோன்கள் ஆகியவைகளில் கள்ளத்தனமாக பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் ஏதேனும், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி