கண்ணன் என்பவரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு.

78பார்த்தது
முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட வாய் தகராறில் கண்ணன் என்பவரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு.


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நொச்சிக்குளம் பகுதியை சார்ந்தவர் கண்ணன். இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த ரத்னவேல் பாண்டி என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி கண்ணனை ரத்தினவேல் பாண்டி மற்றும் அருண்குமார் ஆகிய இருவரும் நொச்சிக்குளம் அருகே உள்ள அன்பாலயம் வீட்டில் முன்பு வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கண்ணன் அளித்த புகார் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி