விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் ராமச்சந்திரன் (80). இவருக்கும் அதே பகுதி சேர்ந்த கருப்பண்ணன் என்பவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவதினத்தன்று தகராறு முற்றியதில், ராமச்சந்திரனை கருப்பண்ணன் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ராமச்சந்திரன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.