ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்தூர்: பூக்குழி திருவிழாவிற்காக நீர் மோர் பந்தல் திறப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் 30,000 மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.  இந்நிலையில் பூக்குழி திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல், பழ வகைகள், அன்னதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நீர் மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, இன்பத் தமிழன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன் திறந்து வைத்து பக்தர்களுக்கு நீர்மோர், லெமன் ஜூஸ், குடிநீர், பானக்கரம், பழ வகைகள், அன்னதானங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்