நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நபர் கன்மாயில் சடலமாக மீட்பு விருதுநகர் மாவட்டம் வாழ்புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி 54 இவர் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அடிக்கடி மயக்கம் அடைந்து வந்துள்ளார். வேலைக்குச் சென்ற அவர் வாழ்புதுப்பட்டி பகுதியில் உள்ள அனுப்பங்குளம் கன்மாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் அளித்த புகாரின் அடிப்படையில் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.