வள்ளிவளநாட்டுக்கலை இலக்கிய போட்டியைஆட்சியர் தொடங்கிவைத்தார்

78பார்த்தது
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரியில் மல்லி வள நாட்டுக் கலை இலக்கியப் பெருவிழா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்து உரையாற்றினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

நீங்கள் அனைவரும் ஒரு பத்து வருடம் கழித்து அதாவது 2035- ல் இந்த திறமை இருக்கிறவர்கள் அந்த திறமையை அவர்களே மறந்து விடுவார்கள். நிறைய திறமைசாலிகள் திறமையை மறந்து விட்டு வேற வேற பணியில் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தில்; நகர்ந்து செல்லும் பொழுது இது செய்வதற்குரிய சூழல்கள் அமையாது. இன்றைக்கு முதல் பரிசு வாங்க கூடியவர்கள் தான் எப்போதும் முதல் பரிசு வாங்குவார்கள் என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. இன்றைக்கு சாதாரணமாக இருக்கிறார்கள் நாளைக்கு திறமையானவர்களாக மாற முடியும். பாரதியாரின் புகழ்மிக்க கவிதை இரண்டாவது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. பாரதியார் மறைந்து 100 வருடங்களுக்கும் மேலாகவும் பாரதியாரை புகழ்ந்து பேசுகிறோம். பாரதியருடைய கவிதைகள் இன்றைக்கும் மனிதர்களுக்கு ஒளி விளக்காக இருக்கின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி